பிரிட்டன் படையில் தற்கொலை செய்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிபிசியின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது ஆப்கான் போரில் இறக்கும் பிரிட்டிஷ் வீரர்களின் எண்ணிக்கையை விட, தற்கொலை செய்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
போதுமான ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையிலேயே வீரர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் படையில் பணியாற்றி, தற்போது பிரிட்டிஷ் படையில் உள்ள படைவீரர்கள் பலர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
-newsonews.com
0 கருத்துரைகள்:
Post a Comment