Monday, July 15, 2013

ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்- மாயாவதி

உ.பி யில் சாதி ரீதியான கூட்டம், ஊர்வலங்களுக்கு கோர்ட்டு தடை விதிக்கும்போது, ஏன் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளுக்கு தடை விதிக்கக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய்; ‘மாயாவதி ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இதனை மத்திய அரசு செய்ய தவறினால் மாயாவதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும்.

மாயாவதி பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவோடு தான் உத்தரபிரதேசத்தில் 2 முறை முதல்-மந்திரி ஆனார். ஆனால் இப்போது பயம் காரணமாக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் ஆகியவை தேசியவாத அமைப்புகள். அவை சாதி ரீதியாகவோ, மதரீதியாகவோ வேறுபாடு பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன.’ என்று கூறியுள்ளார்.

-New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza