Wednesday, July 17, 2013

இஷ்ரத்தின் பெயரை ஹெட்லி கூறவில்லை - என்.ஐ.ஏ!

புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் லஷ்கர் - இ - தய்யிபா போராளி இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற ஐ.பி மற்றும் குஜராத் போலீஸின் கூற்று பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.இஷ்ரத்தின் பெயரை ஹெட்லி கூறவில்லை என்று குறிப்பிட்டு என்.ஐ.ஏ, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.ஐ.பி இதே வாதத்தை முன்னர் கூறியபோதும் அதனை என்.ஐ.ஏ மறுத்திருந்தது.



இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கில் முக்கிய சூத்திரதாரி ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர்குமார் தான் என்று சி.பி.ஐ விசாரணையை தீவிரப்படுத்திய வேளையில் மீண்டும் இஷ்ரத்தின் பெயரை ஹெட்லி குறிப்பிட்டார் என்ற வாதத்தை ஐ.பி முன் வைத்தது.இஷ்ரத் உள்ளிட்ட லஷ்கர் உறுப்பினர்கள் மோடியை கொலைச் செய்ய நடத்திய முயற்சி தோல்வியை தழுவியது என்று 2005-ஆம் ஆண்டு லஷ்கர் கமாண்டர் ஸகீஉர்ரஹ்மான் லக்வி தன்னிடம் கூறினார் என்று டேவிட் கோல்மான் ஹெட்லி என்.ஐ.ஏவிடம் வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு ஐ.பி பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

இது காது வழி கேட்ட செய்தி மட்டுமே என்றும் எஃப்.பி.ஐ இத்தகையதொரு தகவலை தங்களுக்கு தரவில்லை என்று என்.ஐ.ஏ கூறியிருந்தது.ஹெட்லியின் வாக்குமூலத்தை மும்பை தாக்குதல் வழக்கிற்கு மட்டுமே உபயோகிப்போம் என்றும் இதர வழக்குகளுக்கு உபயோகிக்கமாட்டோம் என்றும் அமெரிக்காவிற்கு வாக்குறுதி அளித்துள்ளதால் இந்த வாக்குமூலத்தை யாரிடமும் அளிக்க கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் என்.ஐ.ஏ கோரிக்கை விடுத்திருந்தது. முன்பு என்.ஐ.ஏ சமர்ப்பித்த 117 பக்கங்களைக் கொண்ட அறிக்கையிலும் ஹெட்லி, இஷ்ரத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்று 2009-11 காலக்கட்டத்தில் உள்துறை செயலாளராக பணியாற்றிய ஜி.கே.பிள்ளை கூறியிருந்தார்.

செய்தி:தேஜஸ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza