கெய்ரோ: எகிப்தில் பதவி விலக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த இரவு நடந்த மோதல்களில் கெய்ரோவில் 7 பேர் கொல்லப்பட்டிருக்கிறார். தலைநகரில் ஒரு முக்கிய வீதியில் போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரார்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்துள்ளனர்.
எகிப்துக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க மூத்த இராஜதந்திரி ஒருவர், அங்கு ஜனநாயகத்துக்கு மறு வாய்ப்பு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் இந்த வன்செயல்கள் நடந்திருக்கின்றன. இடைக்கால அரசாங்கத்தின் தலைவர்களை அமெரிக்காவின் தூதுவர் வில்லியம் பேர்ண்ஸ் சந்தித்து பேச்சு நடத்தினார், ஆனால் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் அவரை புறக்கணித்து விட்டன. கடந்த ஜூலை 3ஆம் தேதி முர்ஸி அவர்கள் ஒரு அநியாய இராணுவ புரட்சியின் மூலம் பதவி விலக்கப்பட்டார். முர்சிக்கு எதிரான ஒரு போராட்டத்துக்குப் பின்னர், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே தமது கடமை என்று இராணுவம் கூறிவருகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment