Monday, July 29, 2013

“ஹிந்து தேசியம்” என்று பேசுவது, தேசத்திற்கு எதிரானது - கட்ஜு

நாக்பூர்: முதலில் இந்தியர்கள் என்று நாம் ஒன்று பட வேண்டும். அதுதான், இந்திய தேசியவாதிகளின் அடையலாம். ஹிந்து, முஸ்லிம், சீக்கியம் மற்றும் கிறிஸ்துவம் என்று பேசுவது தேசியத்திற்கு எதிரானது என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சேர்மன் மார்கண்டேய கட்ஜு கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது ஊடகங்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு கேட்டு கொள்வது என்னவென்றால் இந்திய தேசியவாதத்தை ஊக்குவிக்கவேண்டும். மராத்தி டெய்லி லோக்மாத் என்ற பத்திரிகை ஏற்பாடு செய்த விழாவில் “இதழியலின் சிறப்பும், சமய, சார்பன்மையை ஊக்குவிப்பதில் மீடியாவின் பங்கும்” என்ற தலைப்பல் சிறப்புரையாற்றினார்.


அதில் கூறியதாவது, இன்று ஹிந்து தேசியவாதம் என்று சிலர் பேசி வருகின்றனர். ஆனால், இது பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக தான் இருக்கின்றது. நான் இந்துக்களை குற்றம் சொல்லவில்லை. இன்-றைய தலை-வர்-கள் இதை வலி-யு-றுத்-தியே உரை-யாற்றி வரு-கின்-ற-னர். ஆனால், இது பரிவினைக்கு வலி வகுக்கும் என்று கருதுகிறேன் என்றார்.

மேலும், ஊடகம் மற்றும் அறிவு ஜீவிகள் மதம், ஜாதி, மொழி, இனம் போன்ற பரிவினை போக்குகளுக்கு எதிராக போராட வேண்டும். இதை வலி-யு-றுத்தி போ-ராட்-டங்-க-ளில் ஈடு-ப-டு-ப-வர்-களை புறக்-க-ணிக்க வேண்-டும். ஒன்றுபட்ட இந்தியா தான் முன்னேற்றத்தின் பாதை என்றார்.

இந்திய நாட்டின் முதல் தர குடிமக்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே எந்த பாகுபாடும் காட்டக்கூடாது. முஸ்லிம்கள் இன்று தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள். எங்காவது குண்டு வெடித்தால், ஆதாரமில்லாமல் டிவிகளும் நாளிதழ்களும், போலியான எஸ்.எம்.எஸ், ஈமெயில் போன்றவற்றை காட்டி முஸ்லிம் இயக்கங்கள் இந்த குண்டிவெடிப்புக்கு பொறுப்பேற்று உள்ளனர் என்று செய்தி வெளியிடுகின்றனர். இதனால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் குற்ற பரம்பரையாக நிற்கின்றனர். இதற்கு யார் பொறுப்பு என்று மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பனார்.

அனைத்து சமூகங்களிலும் 99 சதவீத மக்கள் நல்லவர்கள் தான். ஆனால், பெரும்பாலும் ஒரு முயற்சியாக, பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்று சித்தரிக்கபடுகின்றார்கள். இந்தியர்கள் தேர்தலில் ஜாதி மற்றும் மத அடிப்படையில் வாக்களிக்கின்றனர். இது, தெளிவாக மக்கள் இனவாதத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza