Friday, May 3, 2013

சிரியாவிலும், மியான்மரிலும் இரத்தக்களரியை நிறுத்தவேண்டும்! - தவக்குல் கர்மான்!



உலன்பதூர் : சிரியாவில் மக்கள் மீது பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவமும், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அரசும், புத்தமதத்தினரும் நடத்தும் தாக்குதல்களை நிறுத்த முயலவேண்டும் என்று யெமனில் ஜனநாயக போராட்டத்திற்கு தலைமை தாங்கியவரும், அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவருமான தவக்குல் கர்மான் உலக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இரு நாடுகளிலும் கடுமையான மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும் அரங்கேறுவதாக மங்கோலியா நாட்டில் நடந்த வெளிநாட்டு பிரதிநிதிகளின் மாநாட்டில் அவர் சுட்டிக்காட்டினார்.மியான்மரில் நடக்கும் படுகொலைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் அது மனிதகுலத்தின் முகத்தில் ஏற்படும் அவமானத்தின் அடையாளமாக மாறும் என்று தவக்குல் கர்மான் எச்சரித்தார்.

செய்தி:மாத்யமம்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza