2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் மோடியின் போலீஸாரால் அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
மோடியை கொலைச் செய்ய லஷ்கர்-இ-தய்யிபா இயக்கம் திட்டமிட்டுள்ளதாக இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) தகவல் தெரிவித்ததன் அடிப்படையிலே இந்த போலி என்கவுண்டர் நடத்தப்பட்டதாக மோடியின் போலீஸ் கூறியிருந்தது.
இந்த அறிக்கை ஐ.பியில் உள்ள உயர் அதிகாரி ஜோடித்தது என்று சி.பி.ஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைக் குறித்து விரிவான விசாரணையை சி.பி.ஐ நடத்தி வருகிறது. இதுத் தொடர்பாக ஐ.பியின் அந்த உயர் அதிகாரியிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த உள்ளது.
ஐ.பி உயர் அதிகாரி அளித்த தகவலின் உறைவிடம் எது? என்பதுக் குறித்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடக்கும்போது குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக இருந்த பி.பி.பாண்டே, செண்ட்ரல் ஐ.பி அதிகாரி ராஜேந்திர குமாருடன் இணைந்து என்கவுண்டர் நாடகத்தை திட்டமிட்டதாக சி.பி.ஐக்கு தகவல் கிடைத்துள்ளது.
-New India
0 கருத்துரைகள்:
Post a Comment