கடந்த செவ்வாய்கிழமை பைஸாபாத் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் முகம்மது சலீம் மீது சக வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இத்தாக்குதல் நமது நீதித்துறை மீதான தாக்குதல் என்றும் தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கைள் மீதான தாக்குதல் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞரை தாக்கியதுடன் மட்டுமல்லாமல் வழக்கறிஞர்கள் ஜமால், சலீம், நதீம் மற்றும் சலீயுர் ரஹ்மானின் அலுவலகங்களையும் தாக்கியுள்ளனர். இது ஒரு கோழைத்தனமான செயலாகும். காலித் முஜாஹித் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதி வேண்டி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டிய வழக்கறிஞர்களின் ஒரு பக்க சார்பு நிலையைதான் இந்த வன்முறை செயல்கள் உணர்த்துகின்றன.
இத்தகைய சந்திப்புகளை கண்டிப்பதுடன், சட்டத்தை தங்கள் கரங்களில் எடுத்துக்கொண்ட வழக்கறிஞர்கள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைக்கிறது. குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருவதுடன் வழக்கறிஞர்கள் ரன்தீர் சிங் சுமன், ஜமால், சலீம், நதீம் மற்றும் சலீயுல் ரஹ்மான் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். காலித் முஜாஹித்தின் மர்மமான மரணம் அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகிறது.
இதனை உத்தர பிரதேச அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்னர் அவரின் முகம் கருத்திருந்ததையும் அவரின் கழுத்தில் வீக்கம் இருந்ததையும் அவரின் உறவினர்கள் கண்டுள்ளனர். அவரின் உதடுகள், நகங்கள் கருத்திருந்ததையும், அவருடைய காதுகளில் இருந்து இரத்தம் வழிந்துள்ளதையும், பிரேத பரிசோதனை அறிக்கை காட்டுகிறது. இவை விஷம் கொடுத்தல் அல்லது கழுத்தை நெறித்தல் ஆகியவற்றின் அறிகுறியாகும்.
எனவே உத்தர பிரதேச அரசாங்கம் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் அளிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் உறுதியான கோரிக்கை வைக்கிறது.
இப்படிக்கு
இல்யாஸ் முகம்மது தும்பே,
செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
0 கருத்துரைகள்:
Post a Comment