2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரணைச் செய்த உயர் ஏ.டி.எஸ் அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட உள்ளது.
2006-மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் மீது இவர்கள் பொய்வழக்கை புனைந்ததை மத்திய அரசு தீவிர விவகாரமாக எடுத்துள்ளது. ஏ.டி.எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுச் செய்ய மஹராஷ்ட்ரா அரசுக்கு உத்தரவிடப்படும் என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி இவ்வாரம் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
0 கருத்துரைகள்:
Post a Comment