மியான்மரில் முஸ்லிம்கள் 2-க்கு மேல் குழந்தை பெறக்கூடாது என்று மியான்மர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், ராக்கேன் புத்தர்களுக்கும் இடையே மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்களாம் மியான்மர் அதிகாரிகள்.
95 சதவீத முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட புத்திதவ்க், முன்தாவ் ஆகிய மாநிலங்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் கூடாது என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அசோசியேட் ப்ரஸ் கூறுகிறது.
புத்தர்களின் மக்கள் தொகை அதிகரிப்பை விட பத்து மடங்கு ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ராக்கேன் மாநில அரசுச் செய்தி தொடர்பாளர் வின் மியாங் கூறுகிறார்.
கடந்த ஆண்டு மியான்மரில் புத்த தீவிரவாதிகள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
-new india
0 கருத்துரைகள்:
Post a Comment