Google Earth மூலம் வெளிநாட்டு உளவுத்துறைகள் தமது நாட்டுக்குள் உளவு பார்க்கின்றன என நீண்ட காலமாக கூறிவந்த ஈரான், தமது சொந்த தயாரிப்பான ‘Islamic Earth’ முப்பரிமாண மேப்பிங் சேவையை தொடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது, இதன் வேலைகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டன என தெரிவித்துள்ள ஈரானிய அரசுக்கு பகுதி சொந்தமான மெஹ்ர் செய்தி ஏஜென்சி, ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மொஹமெட் ஹசன் நாபி இதை உறுதிப்படுத்தியுள்ளார் என்கிறது.
“Google Earth, பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகிறது என்று வெளிப்படையாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த சேவையால் அதிகம் பலன் பெறுபவர்கள் உளவுத்துறை ஆட்கள்தான். ஈரான் போன்ற ‘உளவாளிகள் புக முடியாத’ நாடுகளை Google Earth மூலம் உளவு பார்க்கிறார்கள்.
அதை தடுத்து நிறுத்துவதற்காகவே ‘Islamic Earth’ முப்பரிமாண மேப்பிங் சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேவை மூலம் நிஜமான ஈரானை வெளியாட்கள் பார்க்கலாம்” எனவும் அமைச்சர் தெரிவித்ததாக நியூஸ் ஏஜென்சி கூறுகிறது.
-viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment