உலகம் முழுவதும் உள்ள 38 ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் ஏற்படுத்திய, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுச் சங்கம் ( International Consortium of Investigative Journalists- ICIJ -) அமெரிக்காவின் வாஷிங்ட்னை தளமாக கொண்டு செயல்படுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், பிரிட்டனின் த கார்டியன், பிபிசி, பிரான்ஸின் லே மோன்டே மற்றும் கனடா ஒலிபரப்புக் கழகம் உள்ளிட்ட ஏராளமான முன்னனி ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
எல்லை தாண்டிய புலனாய்வில் ஈடுபடும் இந்த சங்கத்தில் இடம்பெற்றுள்ள பத்திரிகையாளர்களின் தீவிர மற்றும் கடுமையான உழைப்பினால், 2.5 மில்லியன் ரகசிய கோப்புகள் மற்றும் 206 க்கும் அதிகமான கணக்குகளின் ரகசிய கம்ப்யூட்டர் டேட்டாக்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை காட்டிலும் 160 மடங்கு அதிகமான ரகசிய கோப்புகளை இந்த பத்திரிகையாளர்கள் திரட்டி உள்ளனர்.
அண்மையில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் 170 க்கும் அதிகமான நாடுகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் செய்த வரி ஏய்ப்பு விவரங்களை இந்த அமைப்பு அம்பலப்படுத்தி உள்ளது.
வெளிநாடு முதலீடுகள், ரகசிய பண பரிமாற்றங்கள் என பல்வேறு தகிடுதத்தங்கள் மூலம் 170 க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தீவிரவாத அமைப்புகள் செய்த வரி ஏய்ப்புகளை இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது.
இந்த வரி ஏய்ப்பு பட்டியலில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பி.யுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் மற்றும் ரவிகாந்த் ரூயா, சமிர் மோடி, சேட்டன் பர்மன், அபய் குமார் ஓஷ்வால், ராகுல் மேமன், தேஜா ராஜூ, சவுரப் மிட்டல் மற்றும் வினோத் ஜோஷி உள்ளிட்ட பல்வேறு தொழிலபதிபர்கள் உள்பட 612 பேர் இடம் பெற்றுள்ளனர்.
-aanthaiyar
0 கருத்துரைகள்:
Post a Comment