Friday, April 5, 2013

மக்கள் சிவப்பு விளக்குகளை விரும்புவதில்லை! – சுப்ரீம் கோர்ட் கருத்து!!


கிராமப்பஞ்சாயத்து தலைவர்கள் கூட சிவப்பு விளக்கு மற்றும் பாதுகாப்புடன் செல்கின்றனர்.இது போல் அனைவருக்கும் சிவப்பு விளக்குடன் பாதுகாப்பு அளிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட்!
உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாகனங்களில் சிவப்பு விளக்குகள் தவறாக பயன்படுத்தபடுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஜி.எஸ். சிங்வி தலைமையிலான பென்ச் நேற்று விசாரித்தது. அப்போது சிவப்பு விளக்கு மற்றும் சைரன்களை ஆம்புலன்ஸ், தீ அணைப்பு வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் மற்றும் ராணுவ வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

மேலும் வி.ஐ.பி.களுக்கு அரசு செலவில் அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு குறித்தும் நீதிபதிகள் கடுமையான கருத்தை தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள்,”மக்கள் சிவப்பு விளக்குகளை விரும்புவதில்லை என்ற கருத்து உள்ளது
வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்தும் அளவை எந்த அளவுக்கு குறைக்க வேண்டும் என சிந்திக்க வேண்டும். குறிப்பாக அரசியல் அமைப்புக்குட்பட்ட அமைப்புகள், போலீஸ் துறை, ராணுவம், தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை சுப்ரீம் கோர்ட்டில் ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும்.
சிவப்பு விளக்கு பொருத்தினால் வி.ஐ.பி., என்ற நிலை மாற வேண்டும். இது ஒரு தனி நபர் மதிப்பிற்காக காட்டப்படும் அடையாளமாக இருக்க கூடாது. இந்த அடையாளத்துடன் சாலைகளி்ல் கார் வரும் போது பொதுமக்களை நிறுத்தி இவர்களுக்கு மட்டும் வழி விடும் போக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மேலும் வி.ஐ.பி.,க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள போலீஸ் மற்றும் செலவு விவரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கு மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

-aanthaiyar


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza