மும்பை : இந்தியாவின் மிகத் தொன்மையான முஸ்லீம் அமைப்புகளில் ஒன்றான ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் பிரிவான பெண்கள் இஸ்லாமிய அமைப்பு முஸ்லீம் பெண்களை மூளைச்சலவை செய்து ஜிஹாதுக்கு தயார் செய்வதாக மும்பை காவல்துறை வெளியிட்ட மெமோவால் சர்ச்சை வெடித்துள்ளது.
ஜமாத்தே இஸ்லாமி இந்தியாவில் இருக்கும் பிரபலமான முஸ்லீம் அமைப்புகளில் ஒன்றாகும். நாடெங்கும் பல்வேறு கல்லூரிகளையும் பள்ளிகூடங்களையும் நடத்தும் இவ்வமைப்பு மஹாராஷ்டிராவில் மூன்று இளநிலை கல்லூரிகளையும் 40 பள்ளிகூடங்களையும் நடத்தி வருகின்றது. இவ்வமைப்பின் பெண்கள் பிரிவாக Girls Islamic Organisation – GIO இயங்கி வருகின்றது.
கடந்த மாதம் மும்பை காவல்துறையின் உள்ளே வெளியிடப்பட்டுள்ள மெமோவில் “ GIO எனும் அமைப்பு கேரளாவில் ஆரம்பிக்கப்பட்ட ஜமாத்தே இஸ்லாமியின் பிரிவாகும். முஸ்லீம் பெண்களுக்கு அவர்களின் மதத்தையும் குரானையும் பற்றிய அறிவை வழங்குவதே நோக்கம் என்று கூறப்பட்டாலும் உண்மையில் இவ்வமைப்பு பள்ளி மற்றும் கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து ஜிஹாதுக்கு தயார்படுத்துகின்றது” என்று கூறப்பட்டுள்ளது.
மும்பை காவல்துறையின் தனிச்சுற்றுக்கு விடப்பட்ட இம்மெமோ பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. மும்பை காவல்துறை மன்னிப்பு கேட்காவிடில் காவல்துறை மீது அவமதிப்பு வழக்கு தொடர போவதாக ஜமாத்தே இஸ்லாமியின் மஹாராஷ்டிரா மாநில செய்தி தொடர்பாளர் முஹமது அஸ்லம் தெரிவித்துள்ளார்.

source: inneram
0 கருத்துரைகள்:
Post a Comment