Wednesday, April 10, 2013

இந்திரா காந்தி வீட்டு பணியாளர் அமெரிக்க உளவாளி! அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ்!


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் எமர்ஜென்சியை கொண்டுவந்த போது, அவரது நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, பிரதமரின் வீட்டிலிருந்த பணியாளர் ஒருவரே அமெரிக்காவுக்கு உளவாளியாக செயல்பட்டார் என்பது, விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள் ஒன்றில் அம்பலமாகி உள்ளது!


1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி இந்த கேபிள் அனுப்பப்பட்டுள்ளது.
எமர்ஜென்சி காலத்தின்போது, இந்திரா காந்தியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள அமெரிக்கா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அந்தக் காலகட்டத்தில், 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை, இந்திரா காந்தியின் வீட்டு பணியாளர் ஒருவர் மூலம் கிடைத்த உளவுத் தகவல், அமெரிக்காவுக்கு ஓரளவுக்கு உதவியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

எமர்ஜென்சி காலத்தின்போது, டில்லியில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரி, வாஷிங்டனுக்கு அனுப்பிய ரகசிய கேபிள்களிலேயே இத்தகவல் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதங்களில், இந்திரா குறித்து குறிப்பிடப்பட்ட தகவல்களிலெல்லாம், பிரதமர் வீட்டு வட்டாரங்கள் கூறியதாகவே (“house hold” source மற்றும் “sources close to the PM’s household” ) குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், பணியாள் என்பது வெளிப்படையாக இல்லைத்தான். ஆனால், அந்த வீட்டில் வசித்த இந்திரா காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தகவல் தெரிவித்திருக்க முடியாது என்பதால், அங்கு இருந்த பணியாள் ஒருவர் உளவாளியாக செயல்பட்டிருக்கலாம் என ஊகித்துக் கொள்ளலாம்.

-viruviruppu

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza