Sunday, March 3, 2013

மார்ச் 4, “ஈழத்தோழமை நாள்”, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி பங்கேற்ப்பு

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு கூட்டம் ஜெனிவாவில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இம்முறை இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை கொண்டு வர முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
புலம் பெயர் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஜெனிவாவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக மார்ச் 4 தேதி ஈழத்தோழமை நாள் என அறிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.




இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவித்ததோடு,இன்று அது சம்பந்தமாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் SDPI கட்சியின் மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி அவர்கள் கலந்துகொண்டார். மேலும் நல்லக்கண்ணு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ நெடுமாறன், கொளத்துôர் மணி, பண்ருட்டி வேல்முருகன் கவிஞர் புலமைப்பித்தன்,பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, மற்றும் இயக்குநர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 




0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza