ஈரோடு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஹசன்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் விளை நிலங்களுக்கு அடியில் குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து பேசிய மாவட்ட தலைவர் ஹசன் பாபு,கேரளா ,கொச்சினில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு தமிழகத்தில் 7 மாவட்டங்கள் வழியாக சுமார் 310 கிமீ தூரங்களை கடந்து எரிவாயு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பல காரணம் கூறப்பட்டாலும்,கர்நாடகாவில் உள்ள 3 மின்ன்ணு நிலையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லவே இந்த முடிவினை அரசு எடுத்துள்ளது.விளை நிலங்கள் வழியாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 20 மீட்டர் அகல பரப்பளவில் நிலங்களை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது.இது சம்பந்தமாக தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்றுப்பாதை மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்த ஆய்வு செய்ய வேண்டும் எனவும்,இது சம்பந்தமாக 7 மாவட்ட ஆட்சியர்களும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பீடு தொகை கொடுக்கப்படும் சூழலும் உள்ளது. எனவே தமிழக அரசு இத்திட்டத்திற்கான மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.விவசாயிகளின் நலனை பற்றி அக்கரையில்லாமல் அரசு அதிரடி முடிவுகளை எடுக்க முயன்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தினை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் என்று தெரிவித்தார்
0 கருத்துரைகள்:
Post a Comment