Friday, February 1, 2013

இந்தியாவின் புதியதோர் வரலாற்று புரட்சியை SDPI ஏற்படுத்தும்- மதுரை மாவட்ட மாநாட்டில் தேசிய செயலாளர்


எஸ்.டி.பி.ஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் மதுரை மாவட்டத்தின் சார்பாக மாபெரும் அரசியல் எழுச்சி மாநாடு நே(27.01.2013) மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்றது.
 துவக்கமாக பேரணியும் அதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர் B.S.அப்துல் ஹமீது கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் M. ஜாபர் சுல்தான் தலைமை தாங்கினார். மாவட்டபொதுச்செயலாளர் A.முஜீபுர் ரஹ்மான் வரவேற்றார்.

மாவட்டதுணைதலைவர்A.J.K.ஜபருல்லாகான்,மாவட்டசெயலாளர்K.கமால் பாஷா, பாப்புலர்ப்ரண்ட் மாவட்டதலைவர்S.P.நஸ்ருதீன், எஸ்.டி.பி.ஐமாவட்டசெயற்குழுஉறுப்பினர்கள்A.ஹாஜிஅலி,A.சிக்கந்தர்,நெல்பேட்டைA.சிக்கந்தர்,K.சுப்பிரமணியன்,K.ஜியாவுதீன்,F.முஹம்மது தாஹா,வடக்கு தொகுதி தலைவர் M.S.M.அபுதாஹிர்,தெற்கு தொகுதி தலைவர்S.A.K.ராஜா,மத்தியதொகுதிதலைவர்A.பிலால்தீன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தி.மு.க மாவட்ட செயலாளர் கோ.தளபதி,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் கனியமுதன்,வி.சி.க மாநகர் மாவட்ட செயலாளர் R.பாண்டியம்மாள்,பாப்புலர்ஃப்ரண்ட்மாநில செயற்குழு உறுப்பினர் A.அஹமது பக்ருதீன்,நாடார் மகாஜன சங்கம் துணைச்செயலாளர் சதாசிவம்,பேராசிரியர் மவுலவி M.முஸ்தபா கமாலுதீன் காசிமி,ம.தி.மு.க மாவட்ட செயலாளர் M.பூமிநாதன்,ஐக்கிய ஜமாஅத் தலைவர் T.நஜ்முதீன், ஆகியோர்வாழ்த்துரைவழங்கினர்.திமுக மாவட்ட செயலாளர் தளபதி தமது வாழ்த்துரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநாட்டு முழக்கங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.எஸ்.டி.பி.ஐ யுடன் இணைந்து திமுக போராடும் என்றார்.

ம.தி.மு.க மாவட்ட செயலாளர் பூமிநாதன் தமது வாழ்த்துரையில் இன்றைய அரசியல் சீரழிவிற்கு முக்கிய காரணியான மதுவினை ஒழிக்க எஸ்.டி.பி.ஐ களமிறங்கியுள்ளது.இதனை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வாழ்த்துகிறது.இது போன்ற இளைய தலைமுறைகளின் எழுச்சியால் தான் மாற்றங்களை கொண்டு வர முடியும்.என்றார்



நாடார் மகாஜன சங்கம் துணைச்செயலாளர் சதாசிவம் தமது உரையில்,மதுவின் வாடையில்லாத இந்த கூட்டத்தினை கண்டு ஆச்சர்யப்படுகிறேன்.40 ஆண்டு காலம் அரசியல் கட்சி நடத்துபவர்கள் கூட்ட முடியாத கூட்டத்தினை 4ஆண்டுகளே ஆன எஸ்.டி.பி.ஐ கட்சி கூட்டியிறுப்பது தமிழக வரலாற்றில் எஸ்.டி.பி.ஐ கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக மலர்ந்துள்ளது என்பதனை காட்டுகிறது.நான் இந்து சமயத்திலும்,ஆன்மீக சிந்தனையிலும் நாட்டம் உள்ளவன்.நான் சொல்கிறேன் சேது சமுத்திர திட்டத்தினை மதத்தின் பெயரால் ஒரு கூட்டம் தடுப்பதை நாடார் மஹாஜன சங்கம் ஒரு போதும் ஆதரிக்க வில்லை.சேது சமுத்திர திட்டத்திற்காக குரல் கொடுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் நாங்கள் இருக்கிறோம்.என்றார்

பாப்புலர்ஃப்ரண்ட்மாநில செயற்குழு உறுப்பினர் A.அஹமது பக்ருதீன் தமது வாழ்த்துரையில்,இன்றைய அரசியல் சூழலில் முரண்பாடுகள் ஏராளமாக உள்ளன.ஆளத்தகுதியற்றவர்களும்,மக்களின் தேவையினை அறிந்து கொள்ள முடியாத ஆட்சியாளர்களும் இன்றைய இந்தியாவின் சாபக்கேடு.எடுத்துக்காட்டாக விவசாயத்தை அழித்து முதலாளித்துவ சக்திகளின் திருப்தியை பெற அரசே முனைகிறது.இன்றைய இந்தியாவில் குற்றப்பிண்ணனி உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளார்கள்.எனவே எஸ்.டி.பி.ஐ கட்சி இந்த தேசத்தினை பிடித்துள்ள நோய்க்கு மருந்திடும் மருத்துவராக திகழ வேண்டும்.என்றார்


விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் கனியமுதன்,தமது உரையில் இயக்கம் நடத்துவது பெரிதல்ல.அரசியல் கட்சி நடத்துவதும் பெரிதல்ல.ஆனால் கட்டுப்பாடுள்ள தொண்டர்களை கொண்டு கட்டுப்பாட்டுடன் கட்சி நடத்துவது மிகவும் கடினமான காரியம்.ஆனால் எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை சாதித்துள்ளது.இன்றைய போராட்ட அரசியலில் அங்கீகாரத்தினை பெறுவது மிகவும் முக்கியம்.ஃபாசிசத்தை எதிர்கொள்ள வலுவான அரசியல் போராட்டம் அவசியம்.இந்த போராட்டத்திற்கு கடந்த காலத்தை போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் எஸ்.டி.பி.ஐ யுடன் துணை நிற்கும் என்றார்.
மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர்.மெஹபூப் ஆவாத் செரீப்,மாநிலத்தலைவர்கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி, மாநிலபொதுச்செயலாளர் நெல்லைமுபாரக்,மாநில செயலாளர் K.செய்யது இப்ராஹிம், மாநிலசெயற்குழுஉறுப்பினர் K.பாத்திமா கனி ஆகியோர்சிறப்புரையாற்றினார்கள்.


மாநில செயலாளர் K.செய்யது இப்ராஹிம் தமது சிறப்புரையில் கடந்த 4 ஆண்டுகளில் கட்சி மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது என்பதற்கு இந்த மாநாடு சாட்சியாக திகழ்கிறது.சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்க படவில்லை என்றாலும் மக்கள் சேவையினை தொடர்ந்து செய்து வருகிறது.மேலும் பாஜக மாநாடு,நரேந்திர மோடி வருகை போன்ற நிகழ்ச்சிகள் மதுரையில் நடைபெற்றால் இங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது.இது தடுத்து நிறுத்த ப்பட வேண்டும்.இல்லையெனில் போராட்டம் தொடரும் என்றார்.

மாநிலசெயற்குழுஉறுப்பினர் K.பாத்திமா கனி தமது உரையில்தலித்துகள்,முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள்,ஆதிவாசிகள் ஆகியோருக்கு இங்கு வாழ்வுரிமையே மறுக்கப்பட்டு வருகிறது.இவர்களை அதிகார மையத்தில் அமர்த்தவே எஸ்.டி.பி.ஐ உதயமானது.அரசியல் அதிகாரமே எமது இலக்கு என்றார்.


மாநிலபொதுச்செயலாளர் நெல்லைமுபாரக் தமது உரையில் பாதிக்கப்படும் சமூகத்தின் உற்ற தோழனாக எஸ்.டி.பி.ஐ திகழ்கிறது.எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு குறிப்பிட்ட மதமோ,சாதியோ,இனமோ,மொழியோ அடையாளமில்லை.பாதிக்கப்படும் ஒவ்வொரு சமூகமும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சமூகம்.எஸ்.டி.பி.ஐ கட்சி வருகின்ற பாராளுமன்றதேர்தலில் கண்டிப்பாக போட்டியிடும்,என்றார்.

தேசிய செயலாளர் டாக்டர்.மெஹபூப் ஆவாத் செரீப் தமது உரையில் இந்தியா குடியரசு நாடு என்பது ஏட்டளவில் உள்ளது.நடைமுறையில் இல்லை.எனவே அதனை நடைமுறைப்படுத்த எஸ்.டி.பி.ஐ விரும்புகிறது.நாட்டில் 80 சதவீதம் விவசாயத்தை சார்ந்துள்ளது.ஆனால் இந்த 80 சதவீத விவசாயத்தை செய்யும் விவசாயிகளில் 20 விழுக்காடு மக்களிடம் மட்டுமே நிலம் உள்ளது.மீதமுள்ள 60 விழுக்காடு மக்க்ளுக்கு நிலம் இல்லை.நாட்டின் வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களில் மட்டுமே உள்ளது.கிராமப்புறங்களில் அடிப்படை வசதி கூட இல்லை.குறிப்பாக கழிப்பறை வசதி கூட இல்லை.வருகின்ற பாராளுமன்றதேர்தலில் எஸ்.டி.பி.ஐ தனது பலத்தை நிரூபிக்கும்,கர்நாடகா,ராஜஸ்தான் சட்ட மன்ற தேர்தலில் மிகப்பெரும் எண்ணிக்கையில் எஸ்.டி.பி.ஐ களமிறங்கும்.இந்தியாவின் கொள்கையை அமெரிக்கா தீர்மானிக்கிறது.ஆனால் இனிமேல் இந்தியாவின் கொள்கையை எஸ்.டி.பி.ஐ தீர்மானிக்கும்.இந்தியாவின் புதியதோர் வரலாற்று புரட்சியை எஸ்.டி.பி.ஐ ஏற்படுத்தும் என்றார்


மாநிலத்தலைவர்கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி தமது உரையில்,
கட்சி துவக்கப்பட்டு 4 ஆண்டுகளில் 23 மாநிலங்களில் செயல்படுகின்ற அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.மக்கள் நலனுக்காக போராடுவதை தமது குறிக்கோளாக கொண்டு செயல்படும் லட்சக்கணக்கான தொண்டர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தூண்கள்.இது ஒரு போராட்ட குணம் வாய்ந்த அரசியல் கட்சி.தேர்தலைக்கூட போராட்டமாக கருதி சந்திக்கும்.இந்த நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராடும் அரசியல் இயக்கம்.சுதந்திரத்திற்கு போராடிய காங்கிரஸ் கட்சி இன்று அமெரிக்காவின் நலனுக்காக போராடுகிறது.பாரதிய ஜனதா கட்சியோ இன்று உச்சகட்ட அரசியல் நாடகங்களை நடத்துகிறது.இந்தியாவின் வளர்ச்சி என்பது மேல்தட்டு மக்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கிறது.அடித்தட்டு மக்களை பற்றி அக்கரை கொள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியை தவிர்த்து வேறு அரசியல் கட்சியை காண முடியாது.

மேலும் இந்த நாட்டின் சுதந்திர போராட்ட்த்தின் பரம்பரையான முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை என்பது தேசிய பிரச்சினை.இதனை மாநில பிரச்சினையாக சுருக்கி விட முடியாது.தமிழகத்தில் சமீப காலமாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான சதிகள் நடைபெறுகிறது. v.களத்தூரில் தேர்த்திருவிழா விவகாரத்தில் சம்பந்தமில்லாத 70க்கும்மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எதிர் தரப்பில் வெறும்3 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுரையில் வெடிக்காத குண்டுகளை கைப்பற்றும் போலிசார் முஸ்லிம்களை கைது செய்கிறது.நாட்டில் நடைபெற்ற முக்கியமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது சங்பரிவார் அமைப்புகள் தான் என்பது தெளிவான பிறகும்,தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவைத்தது இந்து முன்னணிஎன்பது தெளிவான பிறகும் இன்னும் காவல்துறையின் பார்வை மாறவில்லை.

தமிழக காவல்துறை தமது பார்வைகளை மாற்றி சங்பரிவார அமைப்புகளை கண்காணிக்க வேண்டும்.சங்பரிவார் அமைப்புகளின் சதிச்செயல்களை உள்துறை அமைச்சர் ஷிண்டே வெளியிட்டிருப்பது புதிதான செய்தியல்ல,ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் காவல்துறையின் உயரதிகாரிகளின் மாநாட்டில் இந்தியாவுக்கு காவி பயங்கரவாதம் மிகப்பெரு அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.அப்போது அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை போல இப்போது ஷிண்டே அவர்களுக்கு பாரதீய ஜனதாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.பாரதிய ஜனதாவின் இந்த செயலை எஸ்.டி.பி.ஐ வன்மையாக கண்டிக்கிறது.

கலை என்ற பெயரிலும்,கருத்து சுதந்திரம் என்ற பெயரிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கலாச்சார பயங்கரவாதம் நடைபெறுகிறது.துப்பாக்கி,விஸ்வரூபம் போன்ற திரைப்படங்கள் இதற்கு சாட்சியாக திகழ்கிறது.முஸ்லிம் சமூகம் கமலுக்கும்,சினிமாவுக்கும் எதிரானவர்கள் அல்ல.ஆனால் முஸ்லிம்களின் இறையியல் கோட்பாடுகளை தீவிரவாதத்துடன் ஒப்பிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.விஸ்வரூபம் திரைப்படத்தினை பார்க்காமல் தா.பாண்டியன்,ராமகிருஷ்ணன் போன்ற அரசியல் தலைவர்கள் கருத்து கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். 

இறுதியாக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M.K.நஜ்முதீன் நன்றி கூறினார்.
இம்மாநாட்டில் கட்சியின் செயல்வீரர்கள், நிர்வாகிகள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



SDPI மாநிலபொதுச்செயலாளர் நெல்லைமுபாரக் அவர்கள் உரையாற்றிய பொழுது


பாப்புலர்ஃப்ரண்ட்மாநில செயற்குழு உறுப்பினர் A.அஹமது பக்ருதீன் அவர்கள் உரையாற்றிய பொழுது 




மாநிலத்தலைவர்கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி 
அவர்கள் உரையாற்றிய பொழுது








0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza