Friday, February 1, 2013

டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் விஸ்வரூபத்தை தடை செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் உள்ளிட்ட அமைப்புகள் மனு


டெல்லி மாநில ஆளுநரின் தனி செயலாளரிடம் மனு அளித்த பொழுது 

 நடிகர் கமல் காசன் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்,தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளில்  வெளிவந்துள்ளது மேலும் அதன் படம் டெல்லி உள்பட பல பகுதிகளில் வர இருக்கிறது .இந்த திரைப்படம் முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படும்படி அமைக்கப்பட்டுள்ளது படம் வெளிவந்தால் சமுக ஒற்றுமை சீர்குலையும் அதனால் இதனால்  விஸ்வரூபம் ஹிந்தி மொழி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லி லெஃப்டினண்ட் கவர்னர் தேஜேந்திர கன்னா  ஆகியோரிடம் முதல் கட்டமாக மூவ்மெண்ட் ஃபார் சிவில் ரைட்ஸ் அமைப்புகளின் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மனுவில் அவர்கள் கூறியதாவது  இந்த திரைப்படம் திரைக்கு வந்தால் 

 * சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தின் மத உணர்வுகளை பாதிக்கும்,
 * பயங்கரவாதத்தை முஸ்லீம் சமூகத்தினர் ஆதரிப்பது சித்தரித்துள்ளனர்
 *.தமிழ்நாடு சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடம் என்று காட்டி வருகிறது
 * மற்ற சமுக மக்கள் மத்தியில் முஸ்லிம் சமுகத்தை பயங்கரவாதியாக சித்தரித்துள்ளது
 * முஸ்லீம் சமூகத்தின் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துகிறது
 *நம் நாட்டின் சமூக மற்றும் இன ஒற்றுமைக்காக பாதிக்கப்படும்.   
இது கமல காசனின் 4 வது இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் 

 மேலும் அவர்களின் கோரிக்கையில் புனித திருக்குர்ஆனை அவமதிக்கும் விதமான காட்சிகள் அடங்கிய கமலஹாசனின் விஸ்வரூபம் ஹிந்தி திரைப்படத்தை திரையிடுவதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று அகில இந்திய அளவில் திரையரங்குகளிலும், டி.டி.ஹெச் மூலமாகவும் விஸ்வரூபம் திரையிடப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், இத்திரைப்படத்தை சென்சார் போர்ட் மீண்டும் தணிக்கைச் செய்யவேண்டும், புனித திருக்குர்ஆனையும், முஸ்லிம்களையும் மோசமாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை இக்கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. 


இந்த நிலையில் இதன் மூல மொழியில் இந்த திரைபடத்தை அரசு 15 நாட்கள் தடை செய்தது மேலும் கமல் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அதனால் நீதிபதி படத்தை பார்த்த பிறகு அனுமதி அளித்தார் மறுபடியும் தமிழக அரசு விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்தால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் மறுபடியும் மேல் முறையீடு செய்தது இதனால் திரைபடத்தை தற்காலிகமாக இந்த திரைபடத்தை தமிழகத்தில் தடை செய்தது உயர்நீதிமன்றம். இதனை போல் டெல்லியிலும் படத்தை தடை செய்ய  வேண்டும் கோரினர்


இம்மனுவில் அன்ஸார் உல் ஹக் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் (எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச் செயலாளர்), முஹம்மது அனீஸுஸ்ஸமான் (கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), மவ்லானா உஸ்மான் பேக் (ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்), டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான் (ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா), மவ்லானா அப்துல் வஹ்ஹாப் கில்ஜி(ஆல் இந்தியா இஸ்லாஹி மூவ்மெண்ட்), டாக்டர் பஷீர் முஹம்மது கான் (முஸ்லிம் லீக்), டாக்டர் தஸ்லிம் ரஹ்மானி(முஸ்லிம் பொலிட்டிக்கல் கவுன்சில்), மவ்லானா அன்ஸார் ராஸா (கரீப் நவாப் ஃபவுண்டேசன்), இர்ஃபானுல்லாஹ் கான் (ஜாமிஆ நகர் ஒருங்கிணைப்பு கமிட்டி) உள்பட ஏராளமான பிரமுகர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.


முதல்வரிடம் கொடுக்கப்பட்ட மனு 
கவர்னரிடம் கொடுக்கப்பட்ட  மனு




 மும்பையில் தடை செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை







மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடிகர் கமல் காசன் நடித்துள்ள விஸ்வரூபம்’ திரைப்படம் முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படும்படி அமைந்துள்ளது அதில் புனித திருக்குர்ஆனை அவமதிக்கும் காட்சிகள்,தொழுகைகள் ,மற்றும் முஸ்லிம்கள் ஓத கூடிய பிராத்தனைகள் மேலும் பல காட்சிகள் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளது அதனால் இந்த திரைப்படத்தை மும்பையில் தடை செய்ய வேண்டும் என புனே மாவட்ட ஆட்சியரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முஹம்மத் கான் அவர்கள் மனு அளித்தார் அப்பொழுது மாவட்ட செயலாளர் யாசின்,SDPI மாவட்ட தலைவர் இல்யாஸ்,மாவட்ட செயலாளர் அஸ்லம் ஆகியோர் உடன் இருந்தனர்
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல மாவட்டங்களில் மனு அளிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza