புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு ஏற்படுத்திய விசா தடையில் மாற்றமில்லை என்று அமெரிக்க ஸ்டேட் அஸிஸ்டெண்ட் செகரட்டரி ராபர்ட் ப்ளேக் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வெளியாகாமல் விசா மறுப்பை தளர்த்தவோ, மாற்றம் ஏற்படுத்தவோ செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ராபர்ட் ப்ளேக் இவ்வாறு தெரிவித்தார்.
பா.ஜ.க மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டிருக்கும் வேளையில் விசா பிரச்சனைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் நீதிக் காட்ட மோடியால் இயவில்லை என்று கூறி அமெரிக்கா, மோடிக்கு ஏற்படுத்திய விசா தடையை தொடரவேண்டும் என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்
0 கருத்துரைகள்:
Post a Comment