Saturday, February 9, 2013

கற்பழிப்பு வழக்கு முதலிடம் டெல்லி, சென்னை நான்காவது இடம்

கற்பழிப்பு வழக்கு முதலிடம் டெல்லி, சென்னை நான்காவது இடம்

 டெல்லியில் பிசியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்ட பிறகு தான் பல கற்பழிப்பு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்குகளின் விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.   தலைநகர் டெல்லியில் தான் அதிக கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலிடத்தில் டெல்லி தலைநகரான டெல்லியில் 2009ல் 404 கற்பழிப்பு வழக்குகளும், 2010ல் 414 வழக்குகளும் மற்றும் 2011ல் 453 வழக்குகளும் பதிவாகியுள்ளது.
2வது இடத்தில் மும்பை மும்பையில் கடந்த 2009ம் ஆண்டில் 182 கற்பழிப்பு வழக்குகளும், 2010ல் 194ம் மற்றும் 2011ல் 221 வழக்குகளும் பதிவாகியுள்ளன.பெங்களூருக்கு 3வது இடம் ஐடி நகரமான பெங்களூரில் பதிவான கற்பழிப்பு வழக்குகள் விவரம், 2009-65, 2010-65, 2011- 97 வழக்குகள்.
4வது இடத்தில் சிங்கார சென்னை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 2009ல் 39 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 20010ல் 47கவும், 2011ல் 76கவும் அதிகரித்துள்ளது.
5வது இடத்தில் ஹைதராபாத் ஹைதராபாத்தில் 2009ல் 47 கற்பழிப்பு வழக்குகள் பதிவானது. இந்த எண்ணிக்கை 2010ல் 45க குறைந்து 2011ல் 59க அதிகரித்துள்ளது. 6வது இடத்தில் கொல்கத்தா கொல்கத்தாவில் 2009ல் 42 கற்பழிப்பு வழக்குகள்.2010 ல்  32.2011ல் 46 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza