அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் மூன்று அதிகாரிகளுக்கு, இந்தாலிய நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இத்தாலிய வீதி ஒன்றில் வைத்து இஸ்லாமிய மதகுரு ஒருவரை கடடத்திச் சென்ற ஆபரேஷனே, தண்டனைக்கு காரணம்.
ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடத்தப்பட்ட ‘தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ நடவடிக்கையில் இந்த சம்பவம் நடந்தது.
இத்தாலியில் வசித்த எகிப்தைச் சேர்ந்த மதகுரு அபு ஓமர் என அறியப்பட்ட ஒசாமா ஹசன் முஸ்தாபா நசீர் என்பவருக்கு (மேலே போட்டோவில் உள்ளவர்) அல்-காய்தாவுடன் தொடர்பு இருப்பதாக சி.ஐ.ஏ. சந்தேகித்தது. அதையடுத்து, அவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது கடத்திய சி.ஐ.ஏ. டீம், தமது பிரத்தியேக விமானத்தில் எகிப்துக்கு கொண்டு போய் விசாரித்தனர்.
இவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் அல்ல என பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து, இத்தாலியில் இருந்த சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப் ஜெஃப்ரி காஸ்டெலி, மற்றும் இரு சி.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு எதிராக இந்தாலிய போர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில்தான், தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
ஜெஃப்ரி காஸ்டெலிக்கு 7 ஆண்டுகளும், மற்றைய இருவருக்கும் 6 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த மூன்று அதிகாரிகளையும், சி.ஐ.ஏ. அமெரிக்காவுக்கு அழைத்துக் கொண்டது. எனவே, தண்டனை விதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்க இவர்கள் யாரும் இத்தாலியில் இல்லை.
ஒருவேளை இவர்கள் ஐரோப்பாவுக்கு வந்தால் (சொந்தப் பெயரில் வந்தால்.. ஹா..ஹா..) கைது செய்யப்படலாம்.
source: viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment