நேற்று ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுயில் குண்டுகள் வெடித்து 15க்கும் மேற்ப்பட்டோர் பலியான செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. பலியான மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துயர சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது. இதற்கு காரணாமானவர்கள் சரியான புலனாய்வு மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.
அதே நேரம் இந்த குண்டுவெடிப்பின் மூலம் யார் ஆதாயம் பெறுகிறார்கள் என்பதையும் கணக்கில் கொண்டு விசாரணை நடைபெறவேண்டும்.
பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நேரத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர் நோக்கியுள்ள தருணத்தில், அஃப்சல் குருவை தூக்கிலிட்டதால் காங்கிரஸ் அரசின் மீது பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் தருணத்தில், இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்களையும் விசாரிக்க வேண்டும். ஏற்கனவே நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளை போன்று அவசர கோலத்தில் முகவரியில்லாத அமைப்புகளை குற்றம் சாட்டி திசை திருப்பாமல் சரியான முறையில் விசாரித்து உண்மை குற்றவாளிகளை மத்திய, மாநில அரசுகளும், ஊடகங்களும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment