இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் தனது ஸ்னைப்பர் துக்காக்கியால், பாலஸ்தீன சிறுவன் ஒருவனை குறிவைத்தபோது எடுக்கப்பட்ட போட்டோ, சமூக இணையத்தளத்தில் வெளியாகியதில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது இஸ்ரேலிய ராணுவம்.
மேலேயுள்ள போட்டோ, மொர் ஈஸ்ட்ரோவ்ஸ்கி என்ற இஸ்ரேலிய ராணுவ வீரரின் சமூக இணைத்தள பக்கத்தில் சிறிது நேரம் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. உடனடியாகவே போட்டோ கடும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ராணுவ வீரர் தமது சமூக இணையத்தள பக்கத்தை ரத்து செய்து விட்டார்.
இருந்தபோதிலும், போட்டோ பலரால் பதிவு செய்து கொள்ளப்பட்டு விட்டது.
போட்டோவின் பின்னணியில் உள்ள பில்டிங் ஸ்டக்ஷர்களை பார்க்கும்போது, போட்டோ ஒரு பாலஸ்தீன கிராமத்தில் எடுக்கப்பட்டது என்பதை சுலபமாக சொல்ல முடிகிறது. மொர் ஈஸ்ட்ரோவ்ஸ்கி, இஸ்ரேலிய ராணுவத்தின் ஸ்னைப்பர் யூனிட்டை சேர்ந்தவர்.
ஸ்னைப்பர் யூனிட் ஆட்கள்தான், தொலைவில் இருந்து டெலஸ்கோப்பின் துப்பாக்கி மூலம், இலக்குகளை குறிபார்த்து விழுத்தும் நபர்கள்!
இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர், “குறிப்பிட்ட ராணுவ வீரரின் நடவடிக்கை, IDF (Israel Defence Forces) கட்டுப்பாடுகளுக்கு விரோதமாக உள்ளதால், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்!
மேலேயுள்ள போட்டோவில் உள்ள சிறுவன் உயிருடன் உள்ளானா என்பது தெரியவில்லை.
source: viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment