Sunday, February 17, 2013

குஜராத்தில் முஸ்லிம்களுக்கான ஸ்காலர்ஷிப்பை அமல்படுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம்!


அஹ்மதாபாத்:மத்திய அரசின் முஸ்லிம் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பை குஜராத் மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத அடிப்படையில் அளிக்கப்படும் ஸ்காலர்ஷிப் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்காமல் தடுத்து வைத்த நரேந்திரமோடி அரசின் வாதங்களை நிராகரித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் பெஞ்ச் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது.

ஐந்து நபர்களை கொண்ட பெஞ்சில் ஐந்து நீதிபதிகளில் மூன்றுபேர் ஸ்காலர்ஷிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டனர்.
மத்திய அரசு நடைமுறைப்படுத்திய சிறுபான்மை மெட்ரிகுலேஷன் ஸ்காலர்ஷிப்பை தடுத்த மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.அரசியல் சாசனத்தின் 15(1) பிரிவின் படி குடிமக்களுக்கு இடையே பிறந்தே இடம், மதம், சாதி, வர்கம், பால் வித்தியாசங்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்ட மாநிலங்களுக்கு அனுமதியில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மத்திய அரசின் சிறுபான்மை ஸ்காலர்ஷிப் மதரீதியான பாரபட்சம் என்று குஜராத் மோடி அரசு வாதிட்டது. ஆனால், அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்திய ஸ்காலர்ஷிப்பை குஜராத்தில் தடுத்ததுதான் பாரபட்சம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நீதிபதிகளான வி.எம்.சஹாயி, டி.ஹெச்.வகேலா, ஆகில் குரைஷி ஆகியோர் ஸ்காலர்ஷிப்
வழங்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியபொழுது ஆர்.ஆர்.திரிபாதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் எதிராக தீர்ப்பு வழங்கினர். சிறுபான்மை மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பில் 75 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது.மாநில அரசு 25 சதவீதம் வழங்கவேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza