Thursday, February 14, 2013

குஜராத் முதலீடுகள்:மோடியின் பொய் பித்தலாட்டத்தை தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள்!

CMIE
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி அறிவித்துள்ள நூறுகோடி டாலருக்கான முதலீடுகள் குறித்த புள்ளிவிபரங்கள் போலியானது என்பதை ஆவணங்கள் நிரூபிக்கின்றன. சென்டர் ஃபார் மானிட்டரிங் அகாடமி(சி.எம்.ஐ.இ) அண்மையில் குஜராத்தில் முதலீடுகள் குறித்து நடத்திய ஆய்வில் குஜராத்தில் முதலீடுகள் குறித்து மோடி அறிவித்திருப்பது மிகைப்படுத்தியது என்று தெரியவந்துள்ளது.
மோடி அறிவித்தவற்றில் பெரும்பாலானவை திட்ட அறிவுரைகள் மட்டுமே. 2001-2011 காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மிகக் குறைவானவையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான பெரிய திட்டங்கள் குறித்த விளக்கங்கள் கூட கிடைக்கவில்லை. அறிவித்த திட்டங்களில் நான்கில் ஒன்றை கூட குஜராத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.எம்.ஐ.இ கூறுகிறது. அதுமட்டுமல்ல அவற்றில் பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2009 ஜனவரி மாதம் 12 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பிலான 3,574 திட்டங்களில் கையெழுத்திட்டதாக மோடி அரசு அறிவித்தது. ஆனால், சி.எம்.ஐ.இக்கு 3,94,700 கோடி ரூபாய் மதிப்பிலான 220 திட்டங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
 “அரசு இணைய தளங்களில் வெளியான புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான திட்டங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல, அவற்றில் பல திட்டங்கள் குறித்தும் அடிப்படை விபரங்கள் கூட கிடைக்கவில்லை. பெரும்பாலான திட்டங்களில் நிறுவனத்தின் பெயர், அமைந்திருக்கும் இடம், உற்பத்தி, செயல்படும் தன்மை ஆகியவற்றைக் குறித்து எவ்வித தகவலும் இணையதளத்தில் அளிக்கப்படவில்லை.” என சி.எம்.ஐ.இ அறிக்கை கூறுகிறது.
விபரங்கள் கிடைத்த 220 திட்டங்களில் கூட 1,64,000 கோடி ரூபாய் மதிப்பிலான 36 திட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் 46,500 கோடி ரூபாய் மதிப்பிலான 33 திட்டங்கள் கைவிடப்பட்டன. 10,79,600 கோடி ரூபாய் மதிப்பிலான 31 திட்டங்களின் வளர்ச்சிக் குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆக மொத்தத்தில் 21,700 கோடி ரூபாய் மதிப்பிலான 63 திட்டங்கள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளன. 54,000 கோடி ரூபாய் மதிப்பிலான 54 திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2011-ஆம் ஆண்டைய நிலைமையும் வித்தியாசமானதல்ல. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கையெழுத்திடப்பட்டதாக மோடி அரசு கூறியது. ஆனால், சி.எம்.ஐ.இக்கு இதுத் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. முன்பு போலவே இவற்றிலும் நிறுவனத்தின் பெயர், இடம், உற்பத்தி உள்ளிட்டவை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று சி.எம்.ஐ.இ கூறுகிறது.
அறிவிக்கப்பட்ட 8,380 திட்டங்களில் 1,88,300 கோடி ரூபாய் மதிப்பிலான 175 முதலீடு திட்டங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றில் 1,51,400 கோடி ரூபாய் மதிப்பிலான 87 திட்டங்கள் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளன. ஆனால், அவை வளர்ச்சி அடையும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். மேலும் 5200 கோடி ரூபாய் மதிப்பிலான 19 திட்டங்களும் நடைமுறைப்படுத்த முயற்சித்த 150 கோடி ரூபாய் மதிப்பிலான 2 திட்டங்களும் கைவிடப்பட்டன. 11,900 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்று சி.எம்.ஐ.இ அறிக்கை கூறுகிறது. 18,100 கோடி ரூபாய் மதிப்பிலான 43 திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 திட்டங்கள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளன.அதாவது மோடி மிகைப்படுத்தி அறிவித்த முதலீடுகள் குறித்த ஆய்வு செய்ததில் வெளியான அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சமமாகவே உள்ளன.
மோடி கட்டவிழ்த்துவிட்ட போலியான புள்ளிவிபரங்கள் இதர மாநில முதல்வர்களுக்கு அங்கலாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் சுவராஸ்யம். அண்மையில் மேற்குவங்காள முதல்வர் மமதா பானர்ஜி ஒரு செய்தியாளரிடம், “ஏன் எனது மாநிலம் குஜராத்தைப்போல திறனுடையதாக மாறவில்லை” என்று தன மன எரிச்சலை கொட்டிக்கொண்டார். இதைப்போலவே இதர மாநில முதல்வர்களும் குஜராத்தைப் போல தங்களுடைய மாநிலமும் ஆகவில்லையே என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், பொருளாதார வளர்ச்சியிலும் முதலீடுகளை ஒருங்கிணைப்பதிலும் இதர மாநிலங்களுடன் சமமாக கூட குஜராத்தால் மாற முடியவில்லை என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
2006-07, 2010-11 காலக்கட்டத்தில் குஜராத்தின் வளர்ச்சி 9.3 சதவீதமாகும். இது சாதனைதான் என்றாலும் இந்திய மாநிலங்களின் தரத்தில் குஜராத்திற்கு 6-வது இடமே கிடைத்துள்ளது. இக்கால அளவில் ஒடீஸா  கூட 9.4 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றது. மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்த மாநிலம் பீகார் ஆகும். அதன் வளர்ச்சி சதவீதம் 10.9.சட்டீஷ்கர் 10, ஹரியானா 9.7, மஹராஷ்ட்ரா 9.6.இம்மாநிலங்களுக்கு பிறகுதான் மோடியின் குஜராத் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- thoothu online

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza