காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்த போது அவர் மீது ஆஸிட்டை வீசினார். தந்தையுடன் வந்து கொண்டிருக்கும் போதே இந்த கொடுமை நடந்தது. இரு கண்களிலும் பார்வையை இழந்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று (பிப்ரவரி 12) மரணம் அடைந்தார்.
இவரின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அப்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது .
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பும் கண்ணியமும் நிறைந்த ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைக்கிறது .
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நா
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நா
0 கருத்துரைகள்:
Post a Comment