ஜெய்பூர்:காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஷிண்டே, “ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.
சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணையில், வலதுசாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது” என்றார்.
ஷிண்டேவின் இந்த குற்றச்சாட்டுக்கு வழக்கம்போல் காவி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனிடையே இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தாம் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment