Sunday, January 20, 2013

‘துலே’யில் போலீஸ் நடத்திய வன்முறை! பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!



மஹாராஷ்டிரா மாநிலம் ‘துலே’யில் அப்பாவி முஸ்லிம்கள் மீது போலிஸ் நடத்திய அட்டூழியத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலகம் வன்மையாக கண்டித்துள்ளது. ‘துலே’யில் நடந்த இந்த கொடூரம் குறித்து மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஏஜன்சியை கொண்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவரவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டை வழங்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் தமிழ் மாநில மக்கள் தொடர்பு அலுவலர் அ.பக்ருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போலீஸ் நடத்திய வன்முறையில் 6 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 200 முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் போலீஸ் முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொண்டது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. 70 முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபொழுது ஹிந்துக்களில் 2 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் போலீஸ் முஸ்லிம் வீடுகளை தீக்கிரையாக்கி, பணம், தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் அஜாக்கிரதையான நிலையில் கண்ணீர் புகை குண்டு பிரயோகிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.


மஹாராஷ்டிரா போலீஸின் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமும், ஓரவஞ்சனையுமே இச்சம்பவம் மூலம் தெரியவருகிறது. ஆளுங்கட்சிகளான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கின்றன. ஹிந்துத்துவா சக்திகள் செய்த குற்றங்களின் பெயரிலோ, அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் பெயரிலோ அதிகமான நிரபராதிகளான முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாநிலம் தான் மஹாராஷ்டிரா. இத்தகைய போலீஸ் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனில் குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்து கொலை, தீவைப்பு, சொத்துக்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணிண நடத்தவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza