அன்காரா: அண்மையில் துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகன், பலஸ்தீன் அரசியல் தலைவர்களை அலைபேசியூடே தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
பலஸ்தீன் அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷைல் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசிய அர்தூகன், பலஸ்தீனுக்குள் காணப்படும் உள்ளகப் பிரிவினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு வேண்டியுள்ளார்.
மிக அண்மையில் கெய்ரோவில் இடம் பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் குறித்துத் தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்த துருக்கியப் பிரதமர், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்குப் பலஸ்தீனர்களுக்கிடையே நிலவும் பிரிவினைகள் களையப்பட்டு, அவர்கள் ஒரே அணியில் திரள வேண்டும். பலஸ்தீனின் உள்ளகப் பிரிவுத் தலைவர்களுக்கு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை அன்காரா அரசு மிகுந்த ஆவலோடு அவதானித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்,
0 கருத்துரைகள்:
Post a Comment