ஐதராபாத்: பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தின் ஒரு சிறு நிலத்தைக்கூட முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அசாசுதீன் உவைசி தெரிவித்துள்ளார்.
மஜ்லிசே இதிஹாதுல் முஸ்லிமீன் இயக்கத்தின் தலைவர் அசாசுதீன் உவைசி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது இவ்வாறு தெரிவித்தார். பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. சட்ட ஒழுங்கும் அமைதியும் நிலைபெற வேண்டுமெனில் பாபரி மஸ்ஜித் வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
வழக்கின் முழு விவரங்களையும் தெரிவித்த உவைசி முஸ்லிம்கள் அனைவரும் பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டக்களத்தில் சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கு முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் இருந்த நிலத்தை மூன்று பங்காக பிரித்து இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு பங்கிட்டு கொடுத்தது. இதனை எதிர்த்து முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு முன்னால் சட்டவிரோதமாக சங்கப்பரிவார கும்பல்கள் மசூதிக்குள் சிலைகளை வைத்தனர். இதே போன்ற ஒரு நிலை தற்போது ஐதராபாத் சார்மினார் மஸ்ஜிதிற்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். தொல்லியல் துறை ஆய்வாளர்களும் சங்கப்பரிவாரங்களோடு கைகோர்த்து போலியான ஆதாரங்களை கொண்டு வர முயற்ச்சிக்கின்றனர் என உவைசி குற்றஞ்சாட்டினார்.
யுனைட்டட் முஸ்லிம் ஏக்ஷ்ஷன் கமிட்டியின் தலைவர் அப்துர் ரஹ்மான் குரைஷி கூறும்போது " பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது நீதியும் மதச்சார்பின்மையும் உயிரோடு புதைக்கப்பட்டது. முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை விட்டுக்கொடுக்க ஒருபோதும் தயாரில்லை. இறையில்லத்தை மீட்க வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு என்பதை அவர் உணர்த்தினார். எனவே முஸ்லிம் இளைஞர்கல் சட்டரீதியான கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனையும் கேட்டுக்கொண்டார்
0 கருத்துரைகள்:
Post a Comment