Sunday, December 30, 2012

ஹிஜாப் அணிய முஸ்லிம் பெண்களுக்கு நீதிமன்றம் அனுமதி!



நீதிமன்றத்திற்கு வரும்போது முஸ்லிம் மகளிர் முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரியும் வகையில் ஆடை (நிகாப்) அணியலாம் என்று கனேடிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 அண்மையில் கனேடிய முஸ்லிம் பெண்ணொருவர், பொது இடத்துக்கோ அல்லது ஆண்கள் இருக்கும் இடத்துக்கோ வரும்போது  முழுதும் மூடிய உடையை  தான் அணிந்திருக்க வேண்டும். அதனால் தன்னை அந்த உடை அணிய அனுமதிக்குமாறு கனேடிய நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான தீர்ப்பின் போது அது தனிமனித உரிமை என்று நீதிமன்றம் கருத்தளித்துள்ளது.



கனேடிய சட்டங்களின் படி 'ஹிஜாப், பர்தா, நிகாப் போன்ற உடைகளை தனிமனித உரிமையின் கீழ் யாரும் விரும்பி அணியலாம். ஆயினும், குடியுரிமை சட்ட விதிகளின்படி குடிமகனாக / குடிமகளாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது முகத்தை மூடியிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

source: inneram

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza