புதுடெல்லி: வன்புணர்வு வழக்குகளை விரைந்து விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி வன்புணரப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வன்புணர்வு வழக்குகளை விரைந்து 2 மாதங்களுக்குள் முடிக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வரம்புகளை மீறாமல், வாய்தா வாங்குவதைத் தவிர்த்தும் காலதாமதமின்றி வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென கூறிய உச்ச நீதிமனறம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் அவர்களுக்குக் கொலை மற்றும் கொள்ளை வழக்கு போன்று ஆயுள் தண்டனை வழங்கவேண்டுமெனவும் தன் உத்தரவில் கூறியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment