சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ ) கட்சியின் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாபரி மஸ்ஜித் என்கிற இந்திய முஸ்லிம்களின் (உரிமை சின்னமாக ) திகழ்ந்த அந்த வழிபாட்டுத்தளம் இந்த தேசத்தின் ஒற்றுமையை விரும்பாதவர்களால் சகிப்புத்தன்மை அற்றவர்களால் ஃபாஸிச சிந்தனை படைத்தவர்களால் உலகமே பார்த்துக் கொண்டிருந்த போது இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இந்த கொடுர நிகழ்வு நடந்து வரும் டிச 6 – ஆம் தேதியுடன் 20 வருடம் நிறைவு பெறுகிறது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. மீண்டும் அதே இடத்தில பள்ளிவாசலை கட்டித் தருவோம் என அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் முஸ்லிம்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்.
இந்துத்துவ தலைவர்களை தவிர்த்து தங்களை மத சார்பற்ற தலைவர்களாக காட்டிக் கொண்ட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களது வேதனையை வெளிப்படுத்தி கண்டனம் செய்தார்கள். மீண்டும் அதே இடத்தில பள்ளிவாசல் கட்டப்பட வேண்டும் என கோரினார்கள்.
ஆனால் 20 வருடம் கடந்தும் இந்த தேசத்தின் அவமானத்துக்கு காரணமான காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்காதது வேதனைக்குரியது. கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்களிடம் காங்கிரஸ் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இந்த தேசத்திற்கு அவமானத்தை தேடித்தந்த இந்த செயலை செய்த பா.ஜ.க மற்றும் சங்பரிவார சக்திகள் இன்று பதவிகளை அலங்கரித்து கொண்டு உள்ளனர். லிபர்ஹான் கமிசன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட இன்னும் தண்டிக்கப்படாதது வேதனைக்குரியது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது கண்டனமும், வேதனையும் தெரிவித்த அரசியல் கட்சிகள் இந்த அநீதிக் கெதிராகவும்,பாபரி மஸ்ஜீதை திரும்பக்கட்டவும், இந்த 20 வருடங்களில் என்ன நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
மத்திய அரசு உடனடியாக பாபரி மஸ்ஜீதை அதே இடத்தில கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்கை அதற்கேற்றவகையில் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையேல் அதற்கான சட்டதிருத்தங்களை கொண்டு வந்தாவது இடிக்கப்பட்ட அதே இடத்தில பாபரி மஸ்ஜீதை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மதசார்பற்ற அனைத்து கட்சிகளும் தேவையான நடவடிக்கைகளையும், நிர்பந்ததங்களையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment