Wednesday, December 5, 2012

சிவகங்கை என்கவுண்டரை வன்மையாக கண்டிக்கின்றோம் முறையான விசாரணை வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்


பத்திரிகை செய்தி

கடந்த அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் குரு பூஜை விழாவில் நடந்த மோதலில் திருப்பாச்சேத்தி சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலை செய்யப்பட்டார். கொலைக்குக் காரணம் புதுக்குளத்தைச் சேர்ந்த பிரபு கோஷ்டியினர் என்று சொல்லப்பட்டது. தலைமறைவாக இருந்த பிரபு திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

இப்படி சரணடைந்தவரை  வேறொரு வழக்கு விசாரனைணக்காக மானாமதுனைர அழைத்துச் செல்லும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பினார், அதன்பின் அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்ற பழைய பாணியிலான கதையை சொல்லியுள்ளது போலீஸ்.


சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் படுகொலை செய்யப்பட்டதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்தப் படுகொலையை செய்தவர் யாராக  இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதே வேளையில் நீதி, நீதிமன்றம், விசாரணை என்பதையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு சட்டத்தை தன்கையில் எடுத்து என்கவுண்டர்களை நடத்தி வருவது என்பது நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

சிவகங்கையில் நடந்த என்கவுண்டர் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த என்கவுண்டரை   வன்மையாக கண்டிப்பதோடு இது விஷயத்தில் நியாயமான, முறையான விசாரனைண நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.

இப்படிக்கு

முஹம்மது ஷேக் அன்சாரி,

மாநில செயலாளர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza