ராமநாதபுரம்-புதுவலசை டவுன் பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பல்வேறு கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரத்திலிந்து 20 கி.மீ. தொலைவில் அழகன்குளம் உள்ளது. ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோப்பேரிமடம், சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம் வழியாக அழகன்குளத்திற்கு 6, 6ஏ, எம்.1 ஆகிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ராமநாதபுரத்திலிருந்து புதுவலசை கிராமத்திற்கு 6பி டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ் காலை 6 மணிக்கு புதுவலசை சென்று திரும்பும். இந்த பஸ்சிற்கு வியாபாரிகள், மீனவர்கள், வெளியூர்களுக்கு செல்வோர் காத்திருந்து ராமநாதபுரம் செல்வர். இந்த பஸ் வாரத்தில் இரண்டு நாட்கள் புதுவலசைக்கு வருவதில்லை அல்லது தனியார் பஸ் வரும் நேரத்திற்கு வந்து பயணிகள் இன்றி திரும்பிச் செல்வது தொடர்கிறது.
மேலும் 6, 6ஏ, 6பி, எம்.1 ஆகிய பஸ்களில் எதாவது ஒன்று அல்லது இரண்டு பஸ் தினமும் டிரைவர் அல்லது கண்டக்டர் இன்றி ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலேயே நின்றுவிடுகிறது. அதனால் இந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அவசரத்திற்கு, உடல்நிலை சரியில்லாதவர்கள் டவுனிற்கு வரமுடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. இப்பகுதி மக்கள் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் தெரிவித்தும் உள்ளனர். இருந்தபோதும் இந்த நிலை தொடர்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment