உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீய்ஜிங்கிலிருந்து தென் பகுதியில் இருக்கும் குவாங்ஷோ நகர் வரை இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதி வேக ரயில் பாதையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய ரயில் பீஜிங்கிலிருந்து இன்று (புதன்கிழமை) புறப்பட்டது.
பீய்ஜிங் மேற்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்ட ரயில் சுமார் 8 மணி நேர பயணத்தின்பின் குவாங்ஷோ சென்றடைந்தது. இதற்கு முன் இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் 20 மணித்தியாலங்களுக்கும் மேலாக இருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் சீனாவில் நீண்ட அதிவேக ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்கியது. எனினும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளில் இந்தத் திட்டம் சிக்கி இழுபட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஜூலையில், சீனாவின் அதிவேக ரயில், விபத்தை சந்தித்தது. அதில் 40 பேர் கொல்லப்பட்டனர். தற்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் அத்தும் சீர் செய்யப்பட்ட விட்டதாகவும், அப்படியொரு விபத்து இனி ஏற்பட சான்சே இல்லை என்றும் தெரிவித்துள்ளார், ஸோ லீ. இவர், சீன ரயில்வேயின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர்.
source: viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment