Wednesday, December 26, 2012

அமெரிக்காவை அதிர வைத்த வடகொரியா!

உன்ஹா-3
உன்ஹா-3
வட கொரியா இந்த மாதம் நடத்திய ஏவுகணை சோதனையின்போது (அது ஏவுகணை அல்ல, சட்டலைட் என்கிறது, வ.கொ.) கடலில் விழுந்த முதல் கட்ட ராக்கெட் பாகங்களை கடலில் கைப்பற்றிய தென் கொரியா, அந்தப் பாகங்களை ஆராய்ந்துவிட்டு, வட கொரியாவிடம், சுமார் 10.000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடிய ஏவுகணை தொழில் நுட்பம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு, அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. காரணம், தென்கொரியாவின் கணிப்பு சரியாக இருந்தால், வட கொரியாயால், அமெரிக்காவின் மேற்கு கரையோர நகரங்களை வரை ஏவுகணையை செலுத்த முடியும்.
அமெரிக்காவின் மேற்கு கரை பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் மூன்று. லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ, மற்றும் சியாடில். இந்த மூன்று நகரங்களையும் குறிவைத்து வடகொரியா தமது ஏவுகணையால் தாக்க முடியும்.


கடலில் கிடைத்த உன்ஹா-3 ராக்கெட்டின் பகுதியில் இருந்து, தென் கொரியாவிடம் உள்ள ஏவுகணை தொழில்நுட்பம், 10.000 கி.மீ. தொலைவு வரை, 500 – 600 கிலோ எடையுள்ள குண்டு ஒன்றை (warhead) கொண்டு செல்லக்கூடியதாக இருக்கலாம் என்கிறது தென்கொரியா. தற்போதுள்ள அணுகுண்டுகள், 500 கிலோ எடையைவிட குறைந்தவை.
இதனால், வட கொரியா நினைத்தால், அமெரிக்காவின் மேற்கு நகரங்கள் மீது, அணுகுண்டு தாக்குதலையும் நடத்த முடியும்.

source; viruviruppu

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza