வாஷிங்டன்:ஆப்கான் குடிமகன் ஒருவரின் இறந்த உடல் மீது சிறுநீர் கழித்து அவமதித்த அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவ வீரரை நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது.
2011 ஜூலை 27-ஆம் தேதி ஹெல்மந்த் மாகாணத்தில் இறந்த தாலிபான் போராளி மீது நான்கு ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தை சார்ந்த 4 வீரர்கள் சிறுநீர் கழித்து அவமதிக்கும் இழிவான செயல் வீடியோ காட்சிகள் மூலமாக யூ டியூபில் பரவியது. இது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ராணுவ சீருடையுடன் சிறுநீர் கழிக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவ வீரன், இன்று நல்ல நாள் என சிரிக்கும் காட்சியும் யூ ட்யூப் வீடியோவில் பதிவாகியிருந்தது.
ராணுவ விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோசப் டபிள்யூ சேம்பலுக்கு ரேங்க் குறைக்கப்படுவதோடு, 500 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னர் கேம்பலுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராணுவ ப்ராஸிக்யூட்டர் அப்பீல் அளித்து தண்டனையை நீக்கினார்.
இதே குற்றம் தொடர்பாக மேலும் 3 அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் ராணுவ நீதிமன்றத்தில் நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment