
டெல் அவிவ்: கடந்த சில ஆண்டுகளாக ஈரான், ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சந்தேகப்பட்டு வரும் நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டும்,
தொடர்ந்து அந்நாடு அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அந்நாட்டின் மீது போர் தொடுக்க உத்தரவிடுவேன்,'' என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்..
"நாங்கள் அமைதிக்கான பணியில் மட்டும், அணுசக்தியை பயன்படுத்துகிறோம்' என, ஈரான் கூறி வரும் நிலையிலும் அதை மறுக்கும் மேற்குலக நாடுகள் அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் நான் பிரதமர் பொறுப்பில் இருக்கும் வரை, ஈரான், அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. பொருளாதார தடையை மீறி, ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால், அந்நாட்டின் மீது உடனடியாக இஸ்ரேல் போர் தொடுக்கும்"நாங்கள் அமைதிக்கான பணியில் மட்டும், அணுசக்தியை பயன்படுத்துகிறோம்' என, ஈரான் கூறி வரும் நிலையிலும் அதை மறுக்கும் மேற்குலக நாடுகள் அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் எங்கள் திட்டத்தை, அமெரிக்கா தான் இதுவரை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது. என்று பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment