Wednesday, November 14, 2012

அல் அஸ்ஹர் ஜும்ஆவில் கர்ழாவி, முர்ஸி, எர்துகான் பங்கேற்பு!

yusuf al qardawi
கெய்ரோ:உலகப் பிரசித்திப் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் கர்ழாவி எகிப்தில் உள்ள பிரபல அல் அஸ்ஹர் பல்கலைக்கழக மஸ்ஜிதில் ஜும்ஆவில் (வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை) தலைமையேற்று நடத்த உள்ளார். அல் அஸ்ஹரில் இதுவரை கர்ழாவி ஜும் ஆவுக்கு தலைமை தாங்கி
நடத்தியதில்லை. எகிப்தில் தொடர்ந்து ஆண்டு வந்த சர்வாதிகார ஆட்சியாளர்களால் கத்தர் நாட்டில் வாழ்ந்து வந்தவர் கர்ழாவி.

2011 ஆம் ஆண்டு எகிப்து புரட்சி வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்ந்து அவ்வாண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த ஜும் ஆவுக்கு தலைமை தாங்கினார் அவர். இத்தகவலை எகிப்தின் மார்க்க விவகார அமைச்சர் ஸலாமா அப்துல் கவியூ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதே வேளையில் இந்த ஜும் ஆவில் எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி மற்றும் துருக்கியின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள் மூவரும் முஸ்லிம் உலகின் சில பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். மேலும் முர்ஸியும், எர்துகானும் இரு நாடுகள் இடையேயான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza