Sunday, November 11, 2012

இங்கிலாந்தில் செயல்படும் ரகசிய நீதிமன்றங்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

saberimoghaddam
பிரிட்டன்:பிரிட்டனின் நீதித்துறைக்கு அப்பாற்பட்டு ரகசிய நீதிமன்றங்களை அமைக்கும் பிரிட்டன் அரசின் முயற்சி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரிட்டனின் உள்நாட்டு உளவுத்துறையான M15 ஆல் உருவாக்கப்பட்ட சிறப்பு குடியேற்ற முறையீடு கமிசன் (SPECIAL IMMIGRATION APPEAL COMMISSION – SIAC) என்னும் தீர்பாயம் பல்லாண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இத்தீர்பாயத்தில் நடைபெறும் விசாரணைகள் வெளி உலகுக்கு தெரியாமல் ரகசியமாக நடைபெறும். மேலும் அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்காக தானே ஒரு வழக்கறிஞரை அமர்த்த முடியாது மாறாக அரசாங்கமே ஒரு வழக்கறிஞரை நியமிக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் அல்லாமல் வழக்கறிஞர் மட்டுமே விசாரணைகளில் கலந்துகொள்வார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு வழக்குகளை கையாளுவதர்காக 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது இந்த SAIC தீர்ப்பாயம். 2001 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு கொண்டுவந்த தீவிரவாத எதிர்ப்பு, குற்றம் மற்றும் பாதுகாப்பு சட்டத்திற்கு பின் சுமார்  70 வழக்குகளை விசாரித்துள்ளது. இச்சட்டத்தின் படி தீவிரவாதம் குறித்த சந்தேகத்தின் பேரில் எந்த நபரையும் வாரன்ட் இல்லாமல் கைது செய்யவும் விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கவும் பிரிட்டனின் உள்துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரகசிய விசாரணை தீர்பாயத்தை நீதிமன்றங்களாக விரிவுபடுத்தும் அரசின் முயற்சிக்கு சமத்துவம் மற்றும் மனித உரிமை கமிசன் (Equality and Human Rights Commission – EHRC) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற ரகசிய விசாரணை மன்றங்கள்  மனித உரிமைக்கு எதிராகவும் , பாரபட்சமற்ற விசாரணைக்கு எதிராகவும் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. பிரிட்டனின் நீதித்துறைக்கு அப்பாற்பட்டு ஏற்படுத்தப்படும் இந்த மாற்றங்கள் மூலம் உரிமையியல் வழக்குகளில் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி ரகசிய விசாரணைகளையும் சாட்சிகளையும் ஏற்றுகொள்ள அரசுக்கு அதிகாரம் வழங்கபட வாய்ப்புள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக பிரிட்டனின் உளவுத்துறை M15, M16 என்னென்ன குற்றசாட்டுகளை கூறுகிறது என்னென்ன ஆதாரங்களை சமர்பிக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை கூட மறுக்கப்படும் என்பதுதான் கவலைக்குரியது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza