Tuesday, November 6, 2012

பாப்புலர் ப்ரண்ட் சார்பாக சென்னையில் நடந்த முஸ்லிம் சமுதாய தலைவர்கள் பங்கேற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி



பாப்புலர் ப்ரண்ட் சார்பாக நவம்பர் 1 , 2012 அன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா நகர் கிழக்கில் உள்ள ஜைத்தூன் ரெஸ்டாரன்ட்டில் வைத்து முஸ்லிம் சமுதாய தலைவர்கள் பங்கேற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ .எஸ் .இஸ்மாயீல் அவர்கள் தலைமை தாங்கினார் .

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் இ .எம் அப்துர் ரஹ்மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தை குறிவைக்கும் UAPA போன்ற கருப்புச் சட்டங்களின் பின்னணிகளைக் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சமுதாயத் தலைவர்கள் UAPA கருப்புச் சட்டம் குறித்து கலந்துரையாடினார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza