Friday, November 30, 2012

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கொடூர பிரிவுகளை நீக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோழிக்கோட்டில் இரு தினங்கள் நடைபெற்றது. டிசம்பா 6,2008 அன்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட கொடூர பிரிவுகளை நீக்குமாறு இந்த செயற்குழு கோரிக்கை வைத்தது.தற்போதைய குளிர் கால கூட்டத் தொடரிலேயே ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இந்த பிரிவுகளை நீக்குமாறு மத்திய அரசாங்கத்தையும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த குழு கேட்டுக்கொண்டது.

மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில் மத்திய அரசாங்கம் இந்த பிரிவுகளை பெரிய அளவில் விவாதங்கள் இன்றி நிறைவேற்றியது. இதற்கு முன்னர் இருந்த சிறப்பு சட்டங்களான தடா மற்றும் பொடா சட்டத்தின் பிரிவுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் படியும் குற்றம் சாட்டப்பட்டவர் தான் ஆதாரத்தை வழங்குவேண்டுமே அல்லாமல் அரசு தரப்பு அதனை செய்ய வேண்டாம். குற்றவாளி அவதூறுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கும் எவ்வித சட்ட ரீதியான பாதுகாப்பும் கிடையாது. வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதற்கும் மூடிய அறைக்குள் விசாரணை நடத்துவதற்கும் குற்றவாளிக்கு எதிராக இரகசிய சாட்சிகளை பயன்படுத்துவதற்கும் இந்த புதிய பிரிவுகள் வழிவகை செய்கின்றன.


வாரண்ட் இல்லாமல் தேடுதல் நடத்துவது, வானளாவிய அதிகாரத்துடன் கைப்பற்றுதல் மற்றும் கைதுகளை மேற்கொள்வது, நீதிமன்ற ஆணை இன்றி மூன்றாம் நபர்களை தகவல்களை தருமாறு நிர்ப்பந்திப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான காரியங்களையும் இந்த பிரிவுகள் அங்கீகரிக்கின்றன. முப்பது நாட்கள் காவல்துறை கஸ்டடி உட்பட 180 நாட்கள் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யாமல் காவலில் வைப்பதை இந்த சட்டம் அனுமதிக்கிறது.இதன் மூலம் பிணை வழங்குவது மறுக்கப்படுவதற்கு எதிரான கருத்து உருவாக்கப்படுகிறது.சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் ஒரு இயக்கத்தை கொண்டு வருவதன் மூலம் ஒரு இயக்கத்தை அரசாங்கம் தடை செய்யலாம்.

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான ஒன்று சேர்வதற்கான உரிமையை இது மறுக்கிறது. குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு போதிய வழிமுறைகள் இருப்பதாக இந்த சட்டத்தின் பிரிவுகள் கூறினாலும் அரசியல் பெரும்புள்ளிகள் மற்றும் காவல்துறையின் கரங்களில் அடக்குமுறையின் ஆயுதமாகத்தான் இது பயன்படுத்தப்பட்டிருப்தை உண்மை நிலவரங்கள் உணர்த்துகின்றன.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் உள்ள இந்த கொடூரமான பிரிவுகள் நீக்கப்படாத வரை சட்ட விரோத கைதுகள் மற்றும் விசாரணை கைதிகளாக அப்பாவிகள் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவதையும் நிறுத்த முடியாது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.இந்த சட்டத்திற்கு எதிராக சிபிஐ,சிபிஐ(எம்),ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜன சக்தி கட்சி ஆகியவை முன்வந்திருப்பதை இந்த செயற்குழு வரவேற்கிறது.சமுதாய கூட்டங்களிலும் தங்களின் கட்சி கூட்டங்களிலும் இந்த சட்டத்திற்கு எதிராக பேசி வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,எம்.ஐ.எம். மற்றும் ஏ.ஐ.யு.டி.எஃப். போன்ற கட்சிகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்று சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சமுதாயமும் எதிர் பார்க்கின்றனர் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ஐ பாசிச எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு மக்களை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.டெல்லி ஜந்தர் மந்தர் தர்ணா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அன்றைய தினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடு செய்துள்ளது.ஒரு மாத காலம் நடைபெற்ற ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?’ பிரச்சார நிகழ்ச்சி இந்த கூட்டத்தில் மறு ஆய்வு செய்யப்பட்டது.சிறிதும் பெரிதுமாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இலட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தன.இயக்கத்திற்கான மக்கள் ஆதரவின் சான்றுகளாக இந்த நிகழ்ச்சிகள் அமைந்தன.இந்த பிரச்சாரத்தை சிறப்பாகவும் பிரயோஜனம் உள்ளதாகவும் ஆக்கிய உறுப்பினர்களையும் பொதுமக்களையும் இந்த செயற்குழு பாராட்டுகிறது.

தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மானின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.கே.எம்.ஷரீஃப்,முகம்மது அலி ஜின்னா,மௌலானா உஸ்மான் பேக்,முகம்மது ஷகாபுத்தீன் , வழக்கறிஞர்.கே.பி.முகம்மது ஷரீஃப் , இல்யாஸ் முகம்மது , கரமன அஷ்ரப் மௌலவி , ஓ.எம்.ஏ.ஸலாம்,முகம்மது காலித்,முகம்மது கலீமுல்லாஹ்,பேராசிரியர் பி.கோயா,ஏ.எஸ்.இஸ்மாயில் உள்ளிட்ட பொறுப்புதாரிகள் இதில் கலந்து கொண்டனர் .

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza