போபால்:ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளுக்கு புகழாரம் சூட்டி காங்கிரஸ் எம்.பி உரையாற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் மக்களவை தொகுதியின் எம்.பியான ஸஜ்ஜன்சிங் வர்மா என்பவர்தாம் இந்த சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தியவர் ஆவார்.
நீமச்சில் என்ற இடத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் வர்மா உரையாற்றினார்.அப்பொழுது அவர் கூறியது:அர்ப்பணிப்புடன் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் செயல்படுகின்றார்கள்.ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ ஏ.சி அறைகளில் பூட்டிக்கொண்டு உள்ளே அமர்ந்துள்ளனர். துக்ககரமான காலக்கட்டத்தை கடந்து கட்சி சென்றுகொண்டிருக்கிறது.
2013-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தவறான உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால்,மூத்த தலைவர்கள் கீழ் மட்டத்தில் இறங்கிச் சென்று பணியாற்றாமல் 2013-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெறுவது எளிதல்ல. காங்கிரஸ் தலைவர்கள் ஏ.சி அறையை விட்டு வெளியே வர தயாரில்லை. ஆனால்,ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு லட்சியம் என்ன என்பது தெரியும். எவ்வாறு வெற்றிப்பெற வேண்டும் என்பதும் அவர்களுக்கு தெரியும். இவ்வாறு ஸஜ்ஜன்சிங் வர்மா கூறினார்.
தங்களின் மக்களவை எம்.பி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு புகழாரம் சூட்டியது காங்கிரஸ் கட்சியில் அங்கலாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தான் ஆர்.எஸ்.எஸ்ஸை புகழவில்லை என்று ஸஜ்ஜன்சிங் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். வசதிகள் இல்லாவிட்டாலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பணியாற்றுகின்றார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டாலும் அவர்களுக்கு மூத்த தலைவர்களின் ஆதரவு இல்லை என்று தாம் கூறியதாக ஸஜ்ஜன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment