மும்பை:சட்டவிரோத செயல் தடைச் சட்டத்தின் படி (யு.ஏ.பி.ஏ) ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க மத்திய அரசிடம் சிபாரிசு செய்திருப்பதாக மஹராஷ்ட்ரா அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்னொரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச் செய்வதுக் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
மாநில தீவிரவாத எதிர்ப்புப்படை(ஏ.டி.எஸ்) அபினவ் பாரத்தை தடைச் செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. 2008-ஆம் ஆண்டு மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டி இக்கோரிக்கையை அரசுக்கு விடுத்தது ஏ.டி.எஸ்.
இதுக்குறித்து ஆராய்ந்து வருவதாக மஹராஷ்ட்ரா அரசு, நீதிபதி டி.டி.சின்ஹாவின் தலைமையிலான டிவிசன் பெஞ்சிடம் தெரிவித்தது. அபிவனவ் பாரத்தின் பெயரைக் கொண்ட இன்னொரு ட்ரஸ்ட் அளித்த மனுவில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் அரசு இத்தகவலை தெரிவித்தது. சனாதன் சன்ஸ்தாவை தடைச்செய்யக் கோரும் மனு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு உள்பட மூன்று வழக்குகள் சனாதன் சன்ஸ்தா மீது பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2002-ஆம் ஆண்டு அபினவ் பாரத் என்ற அறக்கட்டளை பதிவுச் செய்யப்பட்டது. ஆனால், 2007-ஆம் ஆண்டு புனேயை மையமாக கொண்டு அதே பெயரில் இன்னொரு ட்ரஸ்டும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்ரஸ்டின் பெயரை ரத்துச்செய்ய வேண்டும் என்று முதலாவதாக பதிவுச் செய்த ட்ரஸ்ட் புகார் அளித்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment