பாலஸ்தீன பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகள் அவ்வப்போது நடத்தும் ஏவுகனை மற்றும் ஆயுதத் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீன மனித உரிமை மையம் (Palestinian Center for Human Rights (PCHR)) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகி இருப்பதுடன், பெண்கள் குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள ஹமாஸ் அமைப்பு, சர்வதேச சமூகமும், முஸ்லீம் உலகமும் பாலஸ்தீனர் களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment