Tuesday, October 2, 2012

இராமநாதபுரத்தில் மதுவுக்கு எதிராக SDPI நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்!


   இன்று காந்தி பிறந்த தினமான அக்டோபர் -02 ஆம் தேதி தமிழகத்தில் மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை மனித சங்கிலி மூலம் எஸ்.டி.பி.ஐ கட்சி துவங்கியது.
தொடர்ச்சியாக 15 நாட்கள் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரப்பாடல்கள்,நாடகங்கள்,துண்டு பிரசுரம் விநியோகம்,போஸ்டர் பிரச்சாரம்,தெருமுனை கூட்டங்கள்,பொதுக்கூட்டங்கள் என்று தமிழகம் முழுவதும் மக்களுக்கு மதுவின் கொடுமையினை விளக்க எஸ்.டி.பி.ஐ திட்டமிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் ,பொது இஷாக் ,மாவட்ட நிர்வாகிகள் ,எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டு மதுவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza