
லண்டன்:முன்னாள் பிரான்சு நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸியின் உத்தரவின்படி பிரெஞ்சு உளவாளி முன்னாள் லிபியா நாட்டு சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபியை கொலைச் செய்ததாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. லிபியா அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிட்டன் பத்திரிகையான டெய்லி மெயில் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
கத்தாஃபியை கைது செய்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தினால், தான் தொடர்பான ரகசியங்கள் வெளியாகிவிடும் என அஞ்சியே சர்கோஸி, கத்தாஃபியை கொலைச் செய்ய உத்தரவிட்டார் என அச்செய்தி கூறுகிறது.
கத்தாஃபி, அவரது பிறந்த ஊரான ஸிர்தில் ஒரு சாக்கடையில் இருந்து பிடிக்கப்பட்டார். லிபியாவில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு நேட்டோ ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து சர்கோஸியுடன் தனது தொடர்பு குறித்த ரகசியங்களை வெளியிடுவேன் என்று கத்தாஃபி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
2007-ஆம் ஆண்டு நடந்த பிரான்சு நாட்டு தேர்தலின் போது சர்கோஸி, கத்தாஃபியிடமிருந்து ஐந்து கோடி யூரோ நன்கொடையாக பெற்றார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இச்செய்தியை இத்தாலி பத்திரிகையான கொரியர் தல்லா ஸெராவும், கத்தாஃபியின் கொலையாளி பிரான்சு நாட்டைச் சார்ந்தவர் தாம் என்பதை லிபியா அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி, எதிர்ப்பாளர்கள் ஸிர்தில் இருந்து கத்தாஃபியை பிடித்தனர். பின்னர் அவர் கொலைச் செய்யப்பட்டார். கத்தாஃபியின் கொலைக்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது

0 கருத்துரைகள்:
Post a Comment