மோன்டி கார்லோ:2012ம் ஆண்டுக்கான கோல்டன் ஃபூட் (GOLDEN FOOT ) என்றழைக்கப்படும் “தங்க பாதம்” விருதை, ஸ்வீடன் கால்பந்து அணி கேப்டன் லேடன் இப்ராஹிமோவிக் தட்டிச் சென்றார்.
மொனாகோ நாட்டில் லார்வாட்டோ கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தி கிரிமால்டி ஃபோரம் என்ற அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்பந்து ஜாம்பவானான பிரேசில் வீரர் பீலே, கோல்டன் ஃபூட் விருதை இப்ராஹிமோவிக்கிற்கு வழங்கினார்.
உலகில் தலைசிறந்த 10 கால்பந்து வீரர்களை, பிரபல ஊடகவியலாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களிலிருந்து இணைய வாக்கெடுப்பு மூலம் GOLDEN FOOT விருதுக்குரிய நபரை பொதுமக்கள் தேர்வு செய்கின்றனர்.
கடந்த 4 மாதங்களாக இணைய வாக்கெடுப்பு நடந்து வந்த நிலையில், 16-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில், ஜெர்மனியுடனான ஆட்டத்தில் லேடன் இப்ராஹிமோவிக் அபாரமாக விளையாடி ஒரு கோல் அடித்தார்.
அந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மனி அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கேப்டன் லேடன் இப்ராஹிமோவிக்கின் நேர்த்தியான வழிகாட்டுதலால், அந்த ஆட்டம் 4-4 என்ற கோல்கள் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனையடுத்து அவருக்கு அதிக வாக்குகள் விழுந்து, கோல்டன் ஃபூட் தங்க பாதம் விருதைத் தட்டிச் சென்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment